பல்கேரிய குடியரசு அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யோட்டோவா அம்மையாருக்கு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 6ஆம் நாள், வாழ்த்து தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், இரு நாடுகளுக்கிடையிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு நிதானமாக வளர்ந்து வருவதோடு, நெடுநோக்குக் கூட்டாளியுறவும் மென்மேலும் செழிப்பாகி வருகிறது. இரு தரப்புறவின் வளரச்சியில் நான் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றேன். அரசுத் தலைவர் யோட்டோவா அம்மையாருடன் இணைந்து, இரு நாடுகள் கையோடு கை கோர்த்து சொந்த வளர்ச்சிப் பாதையில் முன்னேற வழிநடத்தவும், மேலும் ஆக்கப்பூர்வமான, பயனுள்ள, உயிர் ஆற்றல் மிகுந்த இரு தரப்புறவை வளர்த்து, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கவும் பாடுபட விரும்புவதாக தெரிவித்தார்.
