சீன ஊடகக் குழுமத்தின் வசந்த விழா கொண்டாட்ட நிகழ்ச்சி அல்ஜியர்ஸில் நடைபெற்றது

2026ஆம் ஆண்டு அல்ஜியர்ஸ்-மகிழ்ச்சியான வசந்த விழா என்ற கலை நிகழ்ச்சி, ஜனவரி 28 29 ஆகிய நாட்களில், அல்ஜீரிய தலைநகர் அல்ஜியர்ஸில் நடைபெற்றது. சீன ஊடகக் குழுமம் சிறப்பாகத் தயாரித்த குதிரை ஆண்டு வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சியின் விளம்பர காணொளி அதில் ஒளிபரப்பப்பட்டது. வசந்த விழாவின் பாரம்பரியத்தையும் அழகையும் கொண்டுள்ள இக்காணொளி, பண்பாட்டை பாலமாக கொண்டு, வசந்த விழா கொண்டாட்ட சூழலை உருவாக்கியது. தலைசிறந்த காணொளியின் மூலம் உள்ளூர் மக்கள், சீனாவின் வசந்த விழாவின் ஈர்ப்பாற்றலையும் பண்பாட்டு பாரம்பரியத்தையும் உணர்ந்து கொள்ளலாம்.

அல்ஜீரியாவுக்கான சீன தூதரும் அல்ஜீரிய பண்பாட்டு மற்றும் கலை அமைச்சரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அல்ஜீரிய மக்கள், அல்ஜீரியாவில் வாழ்கின்ற சீனர்கள் முதலிய 3000 விருந்தினர்களும் இதில் கலந்துகொண்டனர்.

You May Also Like

More From Author