சீனப் பொருளாதாரம் மே மாதத்தில் நிலவையானதாக இருந்தது என்று சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 16ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில தெரிவித்துள்ளது. பயனுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான ஒட்டுமொத்த கொள்கைகளைச் சீன அரசு நடைமுறைப்படுத்தியதால், மே மாதத்தில் சீனப் பொருளாதார வளர்ச்சி நிலையானதாக இருந்தது.
ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு மேல் வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு கடந்த ஆண்டின் மே மாதத்தில் இருந்ததை விட, 5.8விழுக்காடு அதிகரித்துள்ளது. நாடளவில் சேவைத் துறையின் உற்பத்திக் குறியீடு 6.2விழுக்காடு அதிகரித்துள்ளது. சந்தையின் நுகர்வு குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளதோடு, மே மாதத்தில் சமூக நுகர்வுப் பொருட்களின் சில்லறை விற்பனை மொத்த மதிப்பு 4லட்சத்து 13ஆயிரத்து 260கோடி யுவானை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட, 6.4விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.