ஏதென் வளைகுடா, சோமாலிக் கடற்பரப்பு ஆகியவற்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 48ஆவது தொகுதி காவல் கப்பல் அணிக்குப் பதிலாக சீனக் கடற்படையைச் சேர்ந்த 49ஆவது தொகுதி காவல் கப்பல் அணி ஆக்ஸ்ட் திங்கள் நடுப் பகுதியில் புறப்படவுள்ளது.
சீனக் கடற்படையானது கடற்பரப்பில் பொதுவான எதிர்காலத்தைப் பகிர்ந்து கொள்ளும் சமூகத்தைக் கட்டியமைப்பதில் உறுதியாக பங்கெடுத்து வருகின்றது. அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவற்றைக் கடைபிடித்து, சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பு, பிராந்திய அமைதி மற்றும் நிதானத்துக்கு இது சீனாவின் ஆற்றலை வழங்கி வருகின்றது.
