சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சருமான டிங் சுவைசியாங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினை ஜுன் 20 செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சந்தித்து பேசினார்.
டிங் சுவைசியாங் கூறுகையில், முன்னதாக சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ரஷியாவில் பயணம் மேற்கொண்டு, அரசுத் தலைவர் புதினுடன் நெடுநோக்கு ரீதியில் விரிவாக உரையாடியது, சீன-ரஷிய உறவின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்றார். மேலும், ரஷியாவுடன் ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, பொருளாதார மற்றும் வர்த்தக முதலீட்டை விரிவுபடுத்தி, எரியாற்றல் துறையில் பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, தொடர்புடைய திட்டப்பணிகளின் கட்டுமானத்தை முன்னேற்றி, இரு நாடுகளின் தத்தமது வளர்ச்சிக்கு ஆதரவளிக்க சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
புதின் கூறுகையில், வெளிப்புற இன்னல்கள் மற்றும் அறைக்கூவல்கள் இருந்த நிலையில், ரஷிய-சீன உறவு பன்முகங்களிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. சீனாவுடன் இணைந்து பயனுள்ள ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகள் மற்றும் உலகத்தின் இனிமையான எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்க விரும்புவதாக தெரிவித்தார்.