கிராமி விருதுகள் 2026: இந்தியாவில் எப்போது, எங்கே நேரலையில் பார்க்கலாம்? முழு விவரம்  

Estimated read time 1 min read

இசைத்துறையின் மிகவும் கௌரவமான விருதாகக் கருதப்படும் 68வது கிராமி விருதுகள் (Grammy Awards 2026) விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கிரிப்டோ.காம் (Crypto.com) அரங்கில் நடைபெறவுள்ளது.
உலகப்புகழ் பெற்ற கலைஞர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வு, புதிய சாதனைகளுடனும், அதிரடி நேரலை நிகழ்ச்சிகளுடனும் ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராகிவிட்டது.
அமெரிக்காவில் பிப்ரவரி 1 ஆம் தேதி இரவு இந்த விழா நடைபெறுகிறது. பிப்ரவரி 2, 2026 (திங்கட்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 6:30 மணி முதல் இந்தியாவில் ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் மூவீஸ் சேனலில் இந்த விழாவை நேரலையில் காணலாம்.
கிராமி விருதுகளின் அதிகாரப்பூர்வ இணையதளமான live.grammy.com பக்கத்திலும் இதைப் பார்க்கலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author