சீனாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ள 1.6 லட்சம் கி.மீ. இருப்புப்பாதைகள்

லோங்யான் மற்றும் லோங்சுவான் நகரங்களை இணைக்கும் உயர்வேக இருப்புப் பாதையைச் சேர்ந்த மேய்சோ மற்றும் லோங்ச்சுவான் பகுதி செப்டம்பர் 14ஆம் நாள் காலை திறந்து வைக்கப்பட்டது.

இத்துடன், சீனாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ள இருப்புப் பாதைகளின் மொத்த நீளம், 1 லட்சத்து 60ஆயிரம் கிலோமீட்டரை எட்டியது. இதனிடையில், உயர்வேக இருப்புப் பாதைகளின் நீளம், 46ஆயிரம் கிலோமீட்டராகப் பதிவாகியுள்ளது.

இந்த பதிவு உலகளவில் முதலிடம் வகிக்கிறது என்று சீனத் தேசிய ரயில்வே குழுமம் தெரிவித்தது.
தற்போது வரை, 2 லட்சத்துக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் 99 விழுக்காட்டளவில் இருப்புப்பாதை வலைப்பின்னலில் இணைக்கப்பட்டுள்ளன.

5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் 96 விழுக்காட்டளவில் உயர்வேக இருப்புப்பாதை வலைப்பின்னலில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author