சீனத் தனிச்சிறப்புடைய நிதித் துறையின் வளர்ச்சி பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் எழுதிய முக்கிய கட்டுரை பிப்ரவரி 1ஆம் தேதி வெளியிடப்படும் ஜுயூஷி எனும் இதழில் வெளியிடப்பட உள்ளது.
கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு புதிய யுகத்தில் நிதித் துறையின் வளர்ச்சி விதிகளை சீனா ஆக்கப்பூர்வமாக ஆராய்ந்து, சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச நிதியின் சாராம்சம் பற்றிய அறிவுகளை தொடர்ந்து ஆழப்படுத்தி, நிதித் துறையிலான புத்தாக்கத்தை முன்னேற்றி வருகிறது என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதித் துறையில் வல்லரசை கட்டமைப்பதற்கு சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த நிதி அமைப்பு முறையின் கட்டுமானத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும், நிதித் துறையின் உயர்தர வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு, சட்ட ஆட்சியை நல்லொழுக்கத்துடன் இணைப்பதில் நிலைத்து நின்று, சீனாவின் சிறந்த பாரம்பரிய கலாசாரத்தைப் பரவல் செய்து, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த நிதி கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
