சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை முதல்வர் விஜய் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

Estimated read time 0 min read

இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் ஆளுங்கட்சி ஈடுபடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ வலைதளத்தல் பதிவிட்டுள்ள அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன என தெரிவித்தார்.

சிறப்பான ஆட்சியை தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என்று முதல்வர் வசனம் பேசினார் எனவும். ஆனால் ஒவ்வொரு நாளும் விலை மதிப்பற்ற உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

தவெகவுக்கு வாக்களித்த தமிழக மக்கள் மீது அக்கறை இருந்தால், அவர்களை காப்பாற்ற சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை முதலமைச்சர் விஜய் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

மேலும் ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது என்றால், இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி ஈடுபடுகிறது என இபிஎஸ் குற்றம்சாட்டினார்.

You May Also Like

More From Author