ஆப்கானிஸ்தானுக்கு சீனாவின் முதலாவது தொகுதி நிவாரண உதவிப் பொருட்கள் 7ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் காபூலுக்குச் சென்றடைந்துள்ளன. கூடாரம், கம்பளம் உள்ளிட்டவை இதில் அடக்கம்.
ஆப்கானிஸ்தானின் கோனார் உள்ளிட்ட பிரதேசங்களில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்து, கடும் உயிர் மற்றும் சொத்து இழப்பு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு சீனா உடனடியாக நிவாரண உதவி அளித்து, ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் மக்களின் மீதான ஆழ்ந்த நட்புறவை வெளிப்படுத்தியுள்ளது.
அந்நாட்டின் அரசின் தலைமையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தாயகங்களை வெகுவிரைவில் கட்டியமைக்கும் என்று அந்நாட்டிற்கான சீன தற்காலிக தூதர் பாவ்சூஹெய் விருப்பம் தெரிவித்தார்.