செயற்கைக்கோள் ஏவுதல் வெற்றி குறித்து சீன மற்றும் அல்ஜீரிய அரசுத் தலைவர்களின் வாழ்த்துகள்

Estimated read time 1 min read

அல்ஜீரியாவின் தொலை உணர்வு செயற்கைக்கோள்-3 ஜியுசுவான் ஏவுதல் தளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து, சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங், அல்ஜீரிய அரசு தலைவர் அப்தெல்மட்ஜித் டெபவுன் ஆகியோர் 31ஆம் நாள் வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர்.

அல்ஜீரியாவின் தொலை உணர்வு செயற்கைக்கோள்-3 திட்டம், விண்வெளித் துறையில் சீனாவிற்கும் அல்ஜீரியாவிற்கும் இடையிலான மற்றொரு வெற்றிகரமான ஒத்துழைப்பு என்றும், இருநாட்டு பன்முக உத்திநோக்கு கூட்டாளியுறவை முக்கியமாக வெளிப்படுத்துகிறது என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

டெபவுன் கூறுகையில், இச்செயற்கைக்கோளின் வெற்றிகரமான ஏவுதல் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியில் மற்றொரு மைல்கல் என்று தெரிவித்தார். இருநாட்டு பன்முக உத்திநோக்கு கூட்டாளியுறவை மேலும் ஆழப்படுத்துவதற்காக, சீனாவுடன் இணைந்து அல்ஜீரியா செயல்பட விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author