யுன்னான் மலர்களின் ராஜ்ஜியம் மட்டுமல்ல, ஒரு முக்கிய காபி உற்பத்தி மையமாகவும் திகழ்கிறது. இங்கிருந்து 2025இல் 19000 டன் காபி 43நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது! இவ்வாண்டின் 10வது சீன-தென்னாசிய கண்காட்சியில் காபியை கருப்பொருளாக கொண்ட சிறப்பு அரங்கு நிறுவப்பட்டுள்ளது. காபி பீன்ஸ் முதல் தொடர்புடைய உபகரணம் வரை யுன்னானுக்கு மட்டுமல்ல உலக காபி தொழிலுக்கும் பெரிய பரிமாற்ற தளத்தைவழங்கியுள்ளது!
10ஆவது சீன-தென்னாசிய பொருட்காட்சி ஜூன் 11ஆம் நாள் முதல் 16ஆம் நாள் வரை யுன்னான் மாநிலத்தின் தலைநகர் குன்மிங்கில் நடைபெறுள்ளது. சீன-தென்னாசிய பொருளாதார வர்த்தகத்தின் தொடர்புகளை இப்பொருட்காட்சி மேம்படுத்தும்.
