இந்தியாவின் நட்சத்திர பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, நார்வேயின் ஃபோர்டேயில் நடைபெற்ற 2025 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று மீண்டும் முத்திரை பதித்துள்ளார்.
இதன் மூலம், உலகப் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சானு பெறும் மூன்றாவது பதக்கம் இதுவாகும்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் களமிறங்கிய சானு, ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவுகளில் மொத்தம் 199 கிலோ எடையைத் தூக்கினார்.
நடப்பு சாம்பியனான வட கொரியாவின் ரி சாங்-கம் (Ri Song-gum) 213 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார்.
தாய்லாந்தின் தான்யாதோன் சுக்சரோயன் (Thanyathon Sukcharoen) 198 கிலோவுடன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: மீராபாய் சானுவுக்கு வெள்ளிப் பதக்கம்!
