Budget 2026-27: மகாத்மா காந்தி பெயரில் புதிய திட்டம்… பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..! 

Estimated read time 1 min read

ஃ1இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும். இதன் மூலம், அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள் வரிசையில் அவர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். இந்த நிலையில் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்த மத்திய அமைச்சர் தற்போது ஒன்பதாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் எந்தெந்த துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி,

பயோ பார்மா எனப்படும் உயிரி மருத்துவ திட்டங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்.

அரிய வகை கனிமம் எடுப்பதற்கான புதிய திட்டம் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒடிசாவுக்கு அறிமுகம்

விளையாட்டு உபகரணங்கள் உற்பத்திக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய தொழில் வளதடங்கள் அமைக்கப்படும்‌

காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களை வலுப்படுத்த மகாத்மா காந்தி பெயரில் மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author