மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் சிறு குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்:
எலக்ட்ரானிக்ஸ் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தவும், அத்துறையை ஊக்குவிக்கவும் ரூ. 40,000 கோடி பிரம்மாண்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பயோ-மெடிக்கல் (Bio-Medical) திட்டங்களை ஊக்குவிப்பதற்காக ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
மாநில அரசுகளுடன் இணைந்து 3 பிரத்யேக கெமிக்கல் பூங்காக்கள் உருவாக்கப்படும். மேலும், கைத்தறி மற்றும் பாரம்பரியத் தொழில்களைப் பாதுகாக்க நாடு முழுவதும் 200 பிரத்யேகப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகள் மூலம் நாட்டின் உற்பத்தித் துறை மற்றும் வேலைவாய்ப்பு கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முக்கிய மண்டங்களில் ரூ.5000 கோடி முதலீட்டில் என்ன கற்பூரம் மற்றும் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.
