
உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக 73 இடங்களிலும், அதிமுக 53 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வராக உட்கார்ந்தால் எதிரில் திமுகவின் எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருப்பார். சட்டமன்றத் தேர்தலில் திமுக இரண்டாவது இடம் பிடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் வரவே வாய்ப்புள்ளது. அதேபோல் திமுக சட்டமன்ற தலைவராகும் வாய்ப்பும் உதயநிதிக்கே உள்ளது.
