“நீங்க நினைச்சது ஒண்ணு.. நடந்தது ஒண்ணு!” – கட்சிகளின் வெற்றிப் பட்டியல்..!! 

Estimated read time 1 min read

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நான்கு முனைப் போட்டி நிலவிய நிலையில், தேர்தல் களம் ஒரு போர்க்களமாகவே காட்சியளித்தது.

ஒருபுறம் திமுக மற்றும் அதிமுக  கூட்டணிகளுடன் களம் காண, மறுபுறம் ‘தளபதி’ விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (எடப்பாடி தொகுதி நீங்கலாக) 233 இடங்களிலும், சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து நின்று திராவிடக் கோட்டைகளை அதிரவைத்தன.

தற்போது வெளியாகியுள்ள இறுதி முடிவுகளின்படி, ஒவ்வொரு கூட்டணியிலும் உள்ள கட்சிகள் போட்டியிட்ட இடங்கள் மற்றும் அவற்றில் வெற்றிக்கனியைப் பறித்த இடங்கள் குறித்த முழுமையான ஏ டூ இஸட் புள்ளிவிவரப் பட்டியல் இதோ உங்களுக்காக.

தனித்து போட்டி
தமிழக வெற்றிக் கழகம் (விசில்) – 233 – 108-ல் வெற்றி
திமுக கூட்டணி – 73-ல் வெற்றி
திமுக (உதயசூரியன்) – 164 – 54
காங்கிரஸ் (கை) – 28 – 5
தே.மு.தி.க. (முரசு) – 10 – 1
விடுதலை சிறுத்தைகள் கட்சி (பானை) – 8 – 2
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (கதிர் அரிவாள்) – 5 – 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (அரிவாள் சுத்தியல்) – 5 – 2
ம.தி.மு.க. (உதயசூரியன்) – 4 – 2
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஏணி) – 2 – 2
மனிதநேய மக்கள் கட்சி (உதயசூரியன்) – 2 – 1
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்) – 2 – 1
மனிதநேய ஜனநாயக கட்சி (உதயசூரியன்) – 1 – 1
எஸ்.டி.பி.ஐ. (உதயசூரியன்) – 1 – 0
முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்) – 1 – 0
தமிழர் தேசம் கட்சி (உதயசூரியன்) – 1 – 0
அதிமுக கூட்டணி – 53-ல் வெற்றி
அதிமுக (இரட்டை இலை) – 165 – 47
பாஜக (தாமரை) – 27 – 1
பாமக (மாம்பழம்) – 18 – 4
அமமுக (குக்கர்) – 11 – 1
தமாகா (தாமரை) – 5 – 0
புதிய நீதிக்கட்சி (இரட்டை இலை) – 1 – 0
இந்திய ஜனநாயக கட்சி (இரட்டை இலை) – 2 – 0
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (தாமரை) – 1 – 0
புரட்சி பாரதம் (இரட்டை இலை) – 1 – 0
சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் (இரட்டை இலை) – 1 – 0
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் (இரட்டை இலை) – 1 – 0
தனித்து போட்டி
நாம் தமிழர் கட்சி (விவசாயி) – 234 – 0

 

Please follow and like us:

You May Also Like

More From Author