“ 10 ரூபாய் கொடுத்தா ஆசீர்வாதம்…. வசூல் வேட்டையில் குட்டிச் சாமியார்….!! 

Estimated read time 1 min read

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சிறுவன் ஒருவன் “ஆசீர்வாதம் பெற 10 ரூபாய்” என வசூல் செய்து வருவது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வரிசையில் நிற்கும் பெண்கள் அந்தச் சிறுவனிடம் 10 ரூபாயைக் கொடுத்ததும், அவன் சிவலிங்கத்தைத் தொட்டுவிட்டுப் பின் அவர்களின் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்கிறான். இன்ஸ்டாகிராமில் ‘armaan_khoshya_006’ என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, பக்தி என்பது வியாபாரமாகிவிட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்தக் காட்சியைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் கொந்தளித்து வருகின்றனர். “இவ்வளவு சிறிய வயதில் குழந்தையை இப்படிப் பணம் சம்பாதிக்கத் தூண்டியது யார்?” என்றும், “மத நம்பிக்கையை வைத்து இப்படித் தொழில் செய்வது முறையல்ல” என்றும் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும், மறுபக்கம் இது ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் அநீதி என இணையத்தில் காரசாரமான விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author