ஆக்ஸ்ட் 15ஆம் நாள் சீனத் தேசிய சூழலியல் தினமாக நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு வழிமுறைகளின் மூலம் சூழலியல் நாகரிக பரப்புரை மற்றும் கல்வி நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும் என்று சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 3வது கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 2005ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ஆம் நாள் ச்சே ச்சியாங் மாநிலத்தில் ஹு ச்சோ நகரில் பணி பயணம் மேற்கொண்டார். அப்போது தெளிந்த நீர் மற்றும் பச்சை மலைகள் மதிப்புமிக்க சொத்துக்கள் என்ற கருத்தை முதன்முறையாக முன்வைத்தார். சூழலியல் நாகரிகம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் சிந்தனையில் மிக முக்கியமான அம்சம் இக்கருத்து ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.