“அதிமுகவின் கொங்கு மண்டல ஆசையை தூள் தூளாக்கும் திமுக…!”

Estimated read time 1 min read

தமிழகத்தின் மேற்கு மற்றும் கொங்கு மண்டலங்களில் தனது அரசியல் செல்வாக்கை வலுப்படுத்தும் நோக்கில் திமுக தீவிரமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கரூரில் அதிமுகவின் முக்கியப் பிரிவான அம்மா பேரவையின் தெற்கு நகர இணைச் செயலாளர் சரவணகுமார் தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

“>

கொங்கு மண்டலத்தைத் தனது கோட்டையாகக் கருதி வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த விலகல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில், திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் வரும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு மேற்கு மண்டலத்தில் அதிக கவனம் செலுத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Please follow and like us:

You May Also Like

More From Author