2026ஆம் ஆண்டிற்கான முதலாவது மத்திய ஆவணத்தை சீனா பிப்ரவரி 3ஆம் நாள் வெளியிட்டது. இந்த ஆவணத்தில், வேளாண்துறை மற்றும் கிராமப்புறத்தின் நவீனமயமாக்கத்தை முன்னெடுக்கவும் பன்முக கிராமப்புற மறுமலர்ச்சியை மேம்படுத்தவும் திட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
சீன மத்திய அரசு ஆண்டுதோறும் வெளியிடும் முதலாவது கொள்கை ஆவணமாக, இது கொள்கை முன்னுரிமைகளின் குறிக்காட்டி என பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தித் திறன் மற்றும் தரத்தை உயர்த்துவது, வழக்கமான மற்றும் துல்லியமான ஆதரவு நடவடிக்கையை மேற்கொள்வது, விவசாயிகளின் நிலையான வருமான அதிகரிப்பை ஆக்கப்பூர்வமாக ஊக்குவிப்பது, வாழ்க்கை மற்றும் தொழிலுக்கு உகந்த இணக்கமான கிராமப்புறக் கட்டுமானத்தை உள்ளூர் நிலைமைக்கிணங்க முன்னேற்றுவது, அமைப்பு மற்றும் இயங்குமுறையின் புத்தாக்கத்தை வலுப்படுத்துவது, வேளாண்மை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகளுக்கான கட்சியின் பன்முக தலைமையை வலுப்படுத்துவது ஆகிய 6 பகுதிகள் இந்த ஆவணத்தில் உள்ளன.
,வேளாண்துறை மற்றும் கிராமப்புறத்தின் நவீனமயமாக்கம், சீன தனிச்சிறப்புடைய நவீனமயமாக்கத்தின் ஒட்டுமொத்த நிலை மற்றும் தரத்துடன் தொடர்புடையது என்று இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறை மற்றும் கிராமப்புறத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பது, நகரப்புறம் மற்றும் கிராமப்புறத்தின் வளர்ச்சியை ஒருங்கிணைப்பது ஆகியவற்றில் நிலைத்து நின்று, சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்தை அடிப்படை இயக்காற்றலாக கொண்டு, குறிப்பிட்ட கொள்கையின் பயன்களை உயர்த்தி, சீனாவின் நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கு அடிப்படை ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
