இந்தியாவின் 76-ஆவது குடியரசு தினம் குறித்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 26-ஆம் நாள் இந்திய அரசுத் தலைவர் ட்ராவ்பதி முர்மு அம்மையாருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவும் இந்தியாவும் பழைமையான நாகரிக நாடுகள், வளரும் நாடுகள் மற்றும் ஒன்றுடன் ஒன்றான முக்கிய அண்டை நாடுகளாகும்.
இரு தரப்பும், இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்கள் மற்றும் நீண்டகால நலன்களைக் கருத்தில் கொண்டு, ஒன்றுடன் ஒன்றான ஒத்துழைப்பு கூட்டாளிகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் என்ற நெடுநோக்கு கருத்தில் ஊன்றி நிற்க வேண்டும்.
இரு நாடுகள், பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பு மற்றும் தொடர்பை முன்னேற்றி, சர்ச்சைகளை உரிய முறையில் கட்டுப்படுத்திக் கையாள வேண்டும். முர்மு அம்மையாருடன் இணைந்து, சீன-இந்திய உறவு, சமூக நிதானம் மற்றும் வளர்ச்சி கொண்ட பாதைக்குத் திரும்புவதை முன்னெடுக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார். சீன தலைமை அமைச்சர் லீச்சியாங் அதே நாள் இந்திய தலைமை அமைச்சர் மோடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.