பொருளாதாரம் தொடர்பான ஷிச்சின்பிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் என்ற புத்தகத்திற்கான முதலாவது தொகுதியும், ஷிச்சின்பிங்கும் பல்கலைக்கழகங்களின் நண்பர்களும் என்ற புத்தகத்தின் முதலாவது தொகுதி மற்றும் 2ஆவது தொகுதியின் பாரம்பரிய சீனப் பதிப்பு சமீபத்தில் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் வெளியிடப்பட்டன.
பொருளாதாரம் தொடர்பான ஷிச்சின்பிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்டப் படைப்புகள் என்ற புத்தகம்என்பது ஷிச்சின்பிங்கின் பொருளாதார சிந்தனையை முழுமையாக வெளிகாட்டும் செல்வாக்கு வாய்ந்த படைப்பாக விளங்கும்.
ஷிச்சின்பிங் உள்ளூர் பிரதேசங்கள் மற்றும் மத்திய கமிட்டியில் பணி புரிந்த போது, பல்கலைக்கழங்களின் மாணவர்களுடனான பரிமாற்றம் மற்றும் தொடர்பு பற்றிய கதைகள், ஷிச்சின்பிங்கும் பல்கலைக்கழகங்களின் நண்பர்களும் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
ஹாங்காங் சிறப்பு நிர்வாக அதிகாரி லீகாஜூ, ஹாங்காங்கின் பொருளாதாரம், பண்பாடு, கல்வி உள்ளிட்ட துறைகளின் பிரதிநிதிகள், ஹாங்காங் இளைஞர்களின் பிரதிநிதிகள் முதலியோர் 18ஆம் நாளில், இப்புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா, தொடர்புடைய கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
