ரத்த காடாகும் பலுசிஸ்தான்! 48 மணி நேரத்தில் 177 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை  

Estimated read time 0 min read

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில், பிரிவினைவாத குழுக்களுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த சில தினங்களாக உக்கிரமான போர் நடந்து வருகிறது.
மாகாணத்தின் பரந்து விரிந்த புவியியல் அமைப்பு மற்றும் மலைப்பாங்கான பகுதிகள் காரணமாக பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் படைகளை குவிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி:
கொல்லப்பட்ட கிளர்ச்சியாளர்கள்: 177 பேர் (இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்).
கொல்லப்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள்: 17 பேர்(ராணுவம், கடற்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட).
உயிரிழந்த பொதுமக்கள்: 31 பேர் (இதில் 5 பெண்களும் அடங்குவர்).
மொத்த உயிரிழப்பு: சுமார் 225 பேர்.

You May Also Like

More From Author