சீன விண்வெளி நிலையம், இயங்கத் தொடங்கியதிலிருந்து, கடந்த 2 ஆண்டுகளில், விண்வெளி அறிவியல் மற்றும் பயன்பாட்டுத் துறையில் படைத்த முக்கிய சாதனைகள், எதிர்கால அறிவியல் ஆய்வு திட்டப்பணிகள் ஆகியவை குறித்து ஜனவரி 13-ஆம் நாள் சீன அறிவியல் கழகம் ஷாங்காய் மாநகரில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகம் செய்தது.
விண்வெளி உயிரி அறிவியல் மற்றும் மனித உடல் ஆய்வு, நுண்ணீர்ப்பு விசை இயற்பியல், விண்வெளி வானியல் மற்றும் பூமி அறிவியல், விண்வெளி புதிய தொழில் நுட்பம் மற்றும் பயன்பாடு ஆகிய 4 துறைகளைச் சேர்ந்த 32 தலைப்புகள் பற்றிய ஆய்வு முறைமை, சீன விண்வெளி பயன்பாட்டு அமைப்பு முறையில் வகுத்துள்ளது. இந்த நிலையத்தில் 180-க்கும் அதிகமான அறிவியல் மற்றும் பயன்பாட்டுத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
படம்:VCG