ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, உக்ரைன் கடற்படையின் உளவு கப்பலான சிம்ஃபெரோபோலை கடற்படை ட்ரோன் தாக்குதல் மூலம் வெற்றிகரமாக மூழ்கடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்திற்கு அருகே உள்ள டான்யூப் ஆற்றின் முகத்துவாரத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, வானொலி மற்றும் மின்னணு உளவுப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட லாகுனா-வகை கப்பல், ஆளில்லா கடல் ட்ரோனால் தாக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ், ஒரு யுஏவி நிபுணரை மேற்கோள் காட்டி, உக்ரைன் கடற்படை கப்பலை அழிக்கக் கடல் ட்ரோன் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை எனத் தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் தாக்கப்பட்டதை உக்ரைன் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
உக்ரைனின் மிகப்பெரிய உளவு கப்பலை ட்ரோன் மூலம் தாக்கியழித்தது ரஷ்யா
