அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையிலான அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பலுக்கான ஒத்துழைப்பு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய ஒத்துழைப்பு உடன்படிக்கையில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கையொப்பமிட்டன என்று ஆஸ்திரேலியத் துணைத் தலைமையமைச்சரும், தேசிய பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ் ஆகஸ்டு 12ஆம் நாள் தெரிவித்தார்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் 14ஆம் நாள் கூறுகையில், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையிலான அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பலுக்கான ஒத்துழைப்பு, பிரதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கான முயற்சிகளைச் சீர்குலைத்தது. சீனாவும், தொடர்புடைய பிரதேச நாடுகளும் இதற்கு உறுதியுடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்றார்.
மேலும், இம்மூன்று நாட்டு ஒத்துழைப்பு, அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்திலும், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் உத்தரவாதம் மற்றும் கண்காணிப்பு அமைப்பு முறையிலும் ஏற்படுத்திய பாதிப்புகளை சர்வதேச சமூகம் கண்டிப்பான முறையில் அணுகி, அரசுகளுக்கிடையிலான விவாதப் போக்கினை முன்னேற்றி, இம்மூன்று நாட்டு ஒத்துழைப்புடன் தொடர்புடைய சட்டம் மற்றும் தொழில் நுட்பங்களின் மீதான சர்வதேச சமூகத்தின் கவலையைச் சமாளிக்க வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்தது என்றும் அவர் தெரிவித்தார்.