பாரிஸ் ஒலிம்பிக் செயல்பாட்டையும் பாதித்துள்ள மைக்ரோசாப்ட் முடக்கம்  

பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா நடைபெறுவதற்கு சரியாக ஒரு வாரமே உள்ள நிலையில், உலகளாவிய மைக்ரோசாப்ட் கணினி அமைப்புகள் செயலிழப்புடன் தொடர்புடைய சிக்கல்களை எதிர்கொண்டதாக பாரிஸ் ஒலிம்பிக் அமைப்பாளர்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
உலகளவில் விண்டோஸ் 10 செயல்பாடு முடங்கியதை அடுத்து, பல கணினி அமைப்புகளில் பெரும் செயலிழப்பு, விமான சேவைகள் பாதிப்பு, விமானங்கள் தரையிறக்கம், தொலைக்காட்சி ஒளிபரப்புகள் தடம் புரண்டது மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நகரங்களில் தொலைத்தொடர்புகளையும் பாதித்தது.
இந்த வரிசையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்களும் இந்த சிக்கலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“பாரிஸ் 2024 மைக்ரோசாப்ட் மென்பொருளை பாதிக்கும் உலகளாவிய தொழில்நுட்ப சிக்கல்களை அறிந்திருக்கிறது. இந்த சிக்கல்கள் பாரிஸ் 2024 இன் IT செயல்பாடுகளை பாதிக்கின்றன,” அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author