2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய கருத்து கணிப்பு

 

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டின் இத்தாலி நேரம் தொடங்க உள்ளது. பனி சார் விளையாட்டுகள் மீண்டும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் உலகளவில் இணைய பயனாளர்களிடம் மேற்கொண்ட கருத்து கணிப்பின்படி, ஒலிம்பிக் பற்றிய விழுமியங்கள் சர்வதேச சமூகத்தின் உள்ளடக்கும் தன்மையை உயர்த்த முடியும் என 61.2 விழுக்காட்டினர் கருதுவதாகவும், நடப்பு குளிர்கால ஒலிம்பிக் மூலம் பல்வேறு நாடுகளிடையே பேச்சுவார்த்தை, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கு முக்கிய வாய்ப்புகள் கொண்டு வரப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் காட்சி அனுபவத்தை மேம்படுத்துவதில் சீன ஊடக குழுமம் முன்கண்டிராத பங்கு வகிக்கிறது. 8கே சர்வதேச பொது சமிக்கை தயாரிப்பில் பற்கேற்கும் ஒரேயொரு உலகளாவிய ஊடகமாக சிஎம்ஜி திகழ்கிறது. மேலும், சிஎம்ஜி வரலாற்றில் முதன்முறையாகவே உருவப் பனி சறுக்கல்(Figure Skating), குறுகிய பாதை விரைவு பனி சறுக்கல்(Short Track Speed Skating) ஆகிய போட்டிகளுக்கு சர்வதேச பொது சமிக்கைகளைத் தயாரிக்கும். இது பற்றி 62.4 விழுக்காட்டினர் மிகவும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author