அமைச்சர் ஆதவ் – டெய்சி மார்டின் விவாகரத்து..!

Estimated read time 1 min read

தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் அவரது மனைவி டெய்சி மார்டினும் தங்களது 14 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக இன்று (நவம்பர் 16, 2026) அறிவித்துள்ளனர். இது தொடர்பாக டெய்சி மார்டின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது : ஒருவருக்கொருவர் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்த 14 ஆண்டுகளில், அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த பயணமாக எங்களது வாழ்க்கை அமைந்திருந்தது. நண்பர்களாக, வாழ்க்கைத் துணைகளாக மற்றும் பெற்றோர்களாக வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை நாங்கள் கடந்து வந்தோம்.

இந்நிலையில், தம்பதியினராகப் பிரிந்து தனித்தனிக் பாதைகளைத் தேர்ந்தெடுப்பதென நானும் ஆதவ் அர்ஜுனாவும் பரஸ்பரமாக முடிவு செய்துள்ளோம்.

இது எங்கிருவருக்கும் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பினுள், எங்களது குழந்தையின் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் உறுதி செய்வதிலும், குழந்தையை இணைந்து வளர்ப்பதிலும் (co-parenting) எங்களது அர்ப்பணிப்பு எப்போதும் எங்களின் முதல் முன்னுரிமையாக இருக்கும்.ஆதவ் அர்ஜுனா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு, அவர் எதைத் தேர்ந்தெடுக்கிறாரோ அதில் அவருக்கு மகிழ்ச்சியும், அமைதியும், வெற்றியும் கிடைக்க மனதார வாழ்த்துகிறேன்.

தனிப்பட்ட உரிமைக்கு மதிப்பளிக்க கோரிக்கை: இந்த மாறுதல் கட்டத்தைக் கடந்து செல்லும் எங்களின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, எங்களின் தனிப்பட்ட உரிமைக்கு (Privacy) மதிப்பளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Image

Please follow and like us:

You May Also Like

More From Author