பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், தான் அடைக்கப்பட்டுள்ள சிறையில் உடல்நிலை மோசடைந்து வருவதாகவும், தனக்கு முறையான மருத்துவச் சிகிச்சைகள் மறுக்கப்படுவதாகவும் தெரிவித்து நாட்டின் உயர் நீதிபதிகளுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் தனக்கும் தனது மனைவி புஷ்ரா பீபிக்கும் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளைக் கூட சிறை அதிகாரிகள் திட்டமிட்டு மறுத்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடிதத்தில் தனது உடல்நிலை குறித்த திடுக்கிடும் உண்மைகளைப் பகிர்ந்துள்ள இம்ரான் கான், தொடர் சிறைவாசம் மற்றும் சிகிச்சையின்மையால் தனது வலது கண்ணின் பார்வையில் சுமார் 85 சதவீதத்தை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது தற்போதைய உடல்நிலை மோசமான போக்கைக் கருத்தில் கொண்டால், தனக்கு மூளை இரத்தக் கசிவு அல்லது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுச் சிறையிலேயே உயிர் இழக்க நேரிடும் அபாயம் உள்ளதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் அச்சம் வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து சிறை அதிகாரிகளால் ஒதுக்கப்பட்டுவரும் முறையான மருத்துவச் சிகிச்சைகளால் தனது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் எனக் குறிப்பிட்டுள்ள அவரது இந்தக் கடிதம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமரின் இந்த நிலைக் குறித்தும், அவருக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்தும் உயர் நீதிமன்றம் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
