“ராஜீவ் காந்தி அரசியலில் இணைவதை நான் எதிர்த்தேன்”- சோனியா காந்தி

Estimated read time 1 min read

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி எழுதிய ‘Belonging: A Journey of Love’ என்ற நினைவுக் குறிப்புகள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய சோனியா காந்தி, “இவ்வளவு அன்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. சில விமர்சனங்கள் உண்மையாக இருந்தன. எனது வாழ்க்கை வரலாற்றை கூற முதலில் தயக்கம் இருந்தது. ராஜீவ் காந்தி அரசியலில் இணைவதை நான் எதிர்த்தேன். அரசியலில் மிகவும் மும்முரமாகிவிடுவதால் அவரை இழந்துவிடுவேன் என்று உணர்ந்தேன். ராஜீவின் மரணத்திற்குப் பிறகு நான் முற்றிலும் நிலைகுலைந்து போனேன். என் கணவரின் தொகுதிக்குச் சென்றபோது, மக்கள் என்னை ஏற்றுக்கொண்டதால், ‘நான் இந்த இடத்தைச் சேர்ந்தவள்’ என்று முதன்முதலில் உணர்ந்தேன்.

நான் இந்தப் புத்தகத்தை எழுதத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம், பல விஷயங்கள் கூறப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை முற்றிலும் உண்மையற்றவை; ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு நான் குழந்தையாகவும், ராகுலும் பிரியங்காவும் பெற்றோராகவும் ஆனார்கள். இந்திரா காந்தி மிகவும் கண்டிப்பானவர். அவர் மீது மரியாதை இருந்தாலும், ஒருவித பயமும் இருந்தது. அவர் கோபப்படும்போது எனது தந்தையை நினைவுபடுத்துவார். அப்போது நான் பயத்தில் உறைந்துவிடுவேன். ராஜீவும், சஞ்சய் காந்தியும் அவரது கோபம் தணியும் வரை அமைதியாகக் காத்திருப்பார்கள்” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author