சீனாவின் இணையப் பரவல் விகிதம் 80.1%

Estimated read time 1 min read

சீனாவின் இணைய வளர்ச்சி நிலைமை பற்றிய 57வது அறிக்கை பிப்ரவரி 5ம் நாள் பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டது. அதன்படி 2025ம் ஆண்டின் டிசம்பர் மாதம் வரை, சீனாவில் இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை, 112.5 கோடியை எட்டியது.

நாட்டின் இணையப் பரவல் விகிதம் 80.1 விழுக்காட்டை எட்டியது. எண்ணியல் வளர்ச்சி சாதனைகள், மேலதிகமான மக்களுக்கு நலன்களை விளைவித்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 60.2 கோடியைத் தாண்டியுள்ளது. வாழ்க்கை மற்றும் உற்பத்தி துறையில் இத்தொழில்நுட்பம் ஆழமாகப் பயன்படுத்தப்படுகிறது.

14வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில், இணையப் பரவல், பயன்பாடு ஆகிய துறைகளில், சீனா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இதற்கிடையில் தொழில்நுட்பத் திறன், புத்தாக்க ஆற்றல் முதலியவற்றிலும் சீனா முன்னேறி வருகிறது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம்:VCG

 

You May Also Like

More From Author