சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு மண்டல மகர விளக்கு சீசன் கோலாகலத் தொடக்கம்….

Estimated read time 0 min read

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை 1ஆம் தேதி நடை திறக்கப்படும் வழக்கத்தின்படி, இந்த ஆண்டும் சிறப்பு பூஜைகளுடன் கோவில் நடை திறக்கப்பட்டு ஆன்மிக வழிபாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி கோவில் நடையைத் திறந்து தீபாராதனை காட்டினார். அதனைத் தொடர்ந்து பதினெட்டாம் படிக்குக் கீழே உள்ள ஆழியில் தீ மூட்டப்பட்டு, வழக்கமான அபிஷேகங்களும் பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

நாளையிலிருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த ஆண்டு சபரிமலையில் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் தினசரி 80 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கத் திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதில் ஆன்லைன் முன்பதிவு மூலம் 66 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவு மூலம் 14 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை வரும் டிசம்பர் 27ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.

மண்டல பூஜை முடிந்து கோவில் நடை தற்காலிகமாக அடைக்கப்பட்ட பிறகு, மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு ஜனவரி 14ஆம் தேதி வரை திறந்திருக்கும். சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளதால் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி சபரிமலைக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author