செப்டம்பர் முதல் நாளில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தியன்ஜின் உச்சி மாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த உலகளாவிய ஆட்சிமுறைக்கான முன்மொழிகள் சர்வதேச அரங்கில் மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகின்றன.
தற்போது, சர்வதேச ஆற்றல்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டு, புதிதாக வளர்ந்து வரும் நாடுகளும் பல வளரும் நாடுகளும் ஒட்டுமொத்தமாக எழுச்சி அடைந்து வருகின்றன. இருப்பினும், தற்போதைய சர்வதேச அமைப்புமுறைகள் இந்த மாற்றத்துக்காக மாற்றியமைக்கவில்லை. அதன் விளைவாக, பெரும்பாலான வளரும் நாடுகளின் பிரதிநிதி தன்மையும் கருத்து வெளிப்பாட்டு, இந்த சர்வதேச அமைப்புமுறைகளில் குறைவாக உள்ளன. உலகளாவிய ஆட்சிமுறை முன்மொழிவுகளில் உள்ள, இறையாண்மை சமத்துவத்தை நிலைநாட்டுவது, சர்வதேச சட்ட ஒழுங்கைப் பின்பற்றுவது, பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்துவது முதலிய முக்கிய கருத்துகள், உலகளாவிய தெற்கு நாடுகளின் குரலை ஓங்கி ஒலிக்க செய்யும். இந்த முன்மொழிகளில், மக்களே முதன்மை எனும் கருத்து, பல்வேறு நாடுகளின் மக்கள் உலகளாவிய ஆட்சிமுறையில் பங்கெடுப்பவர்களாகவும் பயனடைபவர்களாகவும் திகழ்கின்றதை குறிக்கிறது. பல்வேறு நாடுகளின் மக்களுக்கு நம்பிக்கையையும் நிலைத்தன்மைக்கான எதிர்பார்ப்பையும் கொண்டு வருவதன் காரணமாக, இந்த விழுமியம் பரந்த அளவிலான ஆதரவைப் பெற்று பயனுள்ள முறையில் செயல்படும்.
உலகளாவிய ஆட்சிமுறையை சீர்திருத்தம் செய்து மேம்படுத்துவது குறித்து சீனா முன்வைத்த கருத்துக்களில், ஐ.நா., தொடர்புடைய சர்வதேச அமைப்புகள், மண்டல மற்றும் துணை மண்டல அளவிலான பலதரப்புவாத அமைப்புமுறை முதலியவற்றை சர்வதேச சமூகம் சார்ந்திருக்கும் அடிப்படையில், சர்வதேச நாணய கட்டமைப்பு சீர்திருத்தம், செயற்கை நுண்ணறிவு, இணையம், காலநிலை மாற்றம், வர்த்தகம், விண்வெளி உள்ளிட்ட அவசர மற்றும் முக்கியமான பிரச்சினைகளுக்கான கவனத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா முன்வைத்த உலகளாவிய ஆட்சிமுறை, புதிய அமைப்புமுறையை கட்டியமைப்பது அல்ல, மாறாக தற்போதைய சர்வதேச அமைப்புமுறைகளின் செயல்பாட்டு திறனை மேம்படுத்த வேண்டும் என்பதை இது குறிக்கிறது.