சௌதி அரேபியா, ரஷியா, ஈராக், குவெய்த், கசகஸ்தான், அல்ஜீரியா, ஓமன் ஆகிய ஓபெக் பிராஸ் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகள் ஜூலை திங்களில் நாள் ஒன்றுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு லட்சத்து 88000 பீப்பாய்கள் அதிகரிக்க வேண்டும் என எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு 7ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது, இத்தகைய நாடுகள் தொடர்ந்து 4 மாதங்களாக கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோர்முஸ் நீரிணை கடல் வழிப் போக்குவரத்து தடைபட்டதையடுத்து, எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், வளைகுடா பகுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதனால் கிடைக்கும் பலன் குறைவுதான். ஓபெக் அமைப்பின் நடவடிக்கைகளின் பயன் இல்லை என்று ஆய்வாளர்கள் ஒருவர் தெரிவித்தார்.
