கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி!

Estimated read time 1 min read

ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் நடத்தப்பட்ட அக்னி-3 ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நெடுந்தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-3 ஏவுகணை, 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன திறன்கொண்ட இந்த ஏவுகணை 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு படைக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் இந்த அக்னி-3 ஏவுகணை ஒடிசா – சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து வானில் ஏவப்பட்டது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் ஏவப்பட்ட இதன் சோதனை வெற்றியடைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்து வரும் பலரும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு புதிய மைல்கல் கிடைத்துள்ளதாக தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author