ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி, உக்ரைன் செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த மாத இறுதியில் இவரின் பயணம் இருக்குமெனவும், பயணத்தின் விவரங்கள் அன்றைய தினம் பகிரப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுடனான மோதலுக்குப் பிறகு போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு அவரது முதல் பயணம் இதுவாகும். அதோடு, கடந்த மாதம் மாஸ்கோவில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்த ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துளதும் குறிப்பிடத்தக்கது.
2022 இல் உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து மேற்கத்திய தலைநகரங்கள் மாஸ்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
ஆனால் இந்தியா மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகள் அதனுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகின்றன.