2026ஆம் ஆண்டு வசந்த விழா கொண்டாட்ட நடவடிக்கை ஒன்றை பிரிட்டனின் 48 குழு கிளப் 6ஆம் நாள் இரவு லண்டனில் நடத்தியது. இந்த நடவடிக்கையில் சீன ஊடகக் குழுமம் தயாரித்த 2026 வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சியின் விளம்பர காணொளி ஒளிப்பரப்பப்பட்டது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் துணை தலைமை அமைச்சருமான ஹெ லிஃபங் இந்நடவடிக்கைக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
அதில் அவர் கூறுகையில்,
அண்மையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மற்றும் பிரிட்டன் தலைமை அமைச்சர் ஸ்டார்மர், இரு நாட்டு பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவின் வளர்ச்சிக்கு முக்கிய கருத்து ஒற்றுமையை எட்டியுள்ளனர். இரு நாட்டுறவுக்கு புதிய நிலைமையை இது விரிவாக்கியது. இரு நாட்டு பல்வேறு துறையினர்கள், இரு நாட்டுறவை முன்னேற்றுவதற்கு மேலும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்.
