சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 16ஆம் நாள் முற்பகல், கசகஸ்தான் குடியரசின் அரசுத் தலைவர் டோகாயேவ் அழைப்பின் பேரில், சிறப்பு விமானம் மூலம், பெய்ஜிங் மாநகரில் இருந்து புறப்பட்டு, அஸ்தானா நகருக்குச் சென்றார். அவர் அங்கு நடைபெற உள்ள 2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் பங்கெடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.