சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் தொடர்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, பாகிஸ்தான் துணைத் தலைமையமைச்சரும், வெளியுறவு அமைச்சருமான தார் உடன் ஜுன் 16ஆம் நாளிரவு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது, ஈரானும் அமெரிக்காவும் எட்டியுள்ள புரிந்துணர்வு குறிப்பாணை பற்றி தார் அறிமுகம் செய்ததோடு, கடந்த சில மாதங்களில் பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்பு மேற்கொண்டு, பாகிஸ்தானின் இணக்க முயற்சிக்கு ஆதரவளிக்கும் சீனாவுக்கு நன்றி தெரிவித்தார்.

வாங்யீ கூறுகையில், அமைதிக்கு முயற்சிகளை மேற்கொள்வது, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளின் சர்வதேச பொறுப்பாகும். போர் நிகழ்ந்த பிறகு, சீனா பல்வேறு தரப்புகளுடன் தொடர்பு கொண்டு, தனது வழிமுறைகளின் மூலம் ஈரானையும் அமெரிக்காவையும் சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது என்றார். 

You May Also Like

More From Author