மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு முறைகேடு : மூவர் கைது!

Estimated read time 0 min read

மதுரை மாநகராட்சியில் வரிகுறைப்பு முறைகேடு விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரி, முன்னாள் உதவி ஆணையர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்கள் உள்ளன.

இதற்கான வரி வசூல் பணிகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக மண்டலம் 2, 3, 4, 5 ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு வரிவிதிப்பு குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது ஆணையாளரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி 3ஆவது மண்டல தலைவரின் நேர்முக உதவியாளர்த் தனசேகரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சதீஷ், உதவி ஆணையாளரின் உதவியாளர்க் கார்த்திகேயன், இடைத்தரர்களான உசேன், ராஜேஷ் ஆகியோர்ச் சைபர் கிரைம் போலீசார் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான 5 பேரில் 3 பேரை மாநகராட்சி பணியில் இருந்து பணியிட நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரி செந்தில்குமரன், ஒய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்ராஜன், இடைத்தரகர் முகமது நூர் ஆகியோரைக் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 2 நாட்களில் அடுத்தடுத்து 8 பேர்க் கைது செய்யப்பட்டுள்ளது மதுரைப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author