தெற்கில் இருந்து வடக்கிற்கு எடுத்துச் செல்லப்பட்ட 8800 கோடி கன மீட்டர் நீர்

Estimated read time 0 min read

தெற்கிலிருந்து வடக்கிற்கு நீர் மடைமாற்றத் திட்டப்பணியின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியின் முதல் கட்டத் திட்டப்பணி செயல்படுத்தப்பட்டதை அடுத்து, வடக்கிற்கு 8800 கோடி கன மீட்டர் நீர் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால், இத்திட்டப்பணியின் நெடுகிலுள்ள 7 மாநிலங்கள் மற்றும் மாநகரங்களைச் சேர்ந்த 19.5 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்.

  1. பெய்ஜிங்கின் நகர்ப்புறங்களுக்கு விநியோகிக்கப்படும் 80 விழுக்காட்டுக்கும் மேலான நீர் தெற்கிலிருந்தே வருகின்றது. தண்ணீர் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதைத் தவிர, இத்திட்டப்பணி மூலம், வெள்ளக் காலத்தின் போது வரும் மிகை நீர் சிறப்பாக நெடுகிலுள்ள 50க்கும் மேலான ஆறுகளில் சேர்க்கப்படுகின்றது. இதன் விளைவாக யோங்டிங் ஆறு, பெய்யாங்டியன் ஆறு முதலிய ஆறுகள் புத்துயிர் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author