குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவக்க விழாவில் சீன அரசவை உறுப்பினர் பங்கெடுப்பு

Estimated read time 1 min read

பிப்ரவரி 6ம் நாளிரவு 25வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இத்தாலியின் மிலானில் துவங்கியது. சீன அரசவையின் உறுப்பினர் ஷேன் யீ ஜின் அம்மையார் அழைப்பை ஏற்று, இத்துவக்க விழாவில் கலந்து கொண்டார்.

துவக்க விழாவுக்கு முன், ஷேன் யீ ஜின், இத்தாலி அரசுத் தலைவர் மடரோலாவுடன் உரையாடி, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் வணக்கத்தைத் தெரிவித்தார்.

பிப்ரவரி 7ம் நாள் ஷேன் யீ ஜின், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் கொவென்ட்ரி அம்மையாரைச் சந்தித்துப் பேசினார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் உயர்நிலை ஒத்துழைப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

படம்:VCG

You May Also Like

More From Author