ஐசிசி-யின் கோரிக்கையை நிராகரித்த பங்களாதேஷ்  

Estimated read time 1 min read

பங்களாதேஷில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 2026-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியா வரப்போவதில்லை எனப் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம்(BCB) அதிரடியாக அறிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களை முன்வைத்துத் தங்களது போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று பங்களாதேஷ் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்(ICC) கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்துப் பேசிய பிசிபி துணைத் தலைவர் ஷகாவத் ஹொசைன், “நாங்கள் எடுத்த முடிவில் எள்ளளவும் மாற்றமில்லை. எக்காரணம் கொண்டும் இந்தியாவிற்குப் பயணம் செய்யப் போவதில்லை. மாற்று இடங்களை ஐசிசி ஆலோசித்து வருகிறது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author