ஜப்பான் அரசின் அணுக் கழிவு நீர் வெளியேற்றத் திட்டத்திற்கு உலகளவில் எதிர்ப்பு மற்றும் கண்டனம் எழுந்து வருகிறது. கடந்த 3 திங்களில், சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிலையம் மேற்கொண்ட 2 சர்வதேச இணையக் கருத்து கணிப்புகளின் முடிவின்படி, சர்வதேசச் சமூக அக்கறை மற்றும் எதிர்ப்பை ஜப்பான் புறக்கணித்த செயலுக்கு 94.85 விழுக்காட்டினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தவிரவும், அணுக் கழிவு நீரைக் கடலில் வெளியேற்றுவது, கடல் சுற்றுச்சூழல் மற்றும் மனித நலத்துக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துமென 91.4 விழுக்காட்டினர் கவலை தெரிவித்தனர். சர்வதேசச் சமூகம் கவனம் செலுத்தும் அம்சங்களுக்கு, சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் வெளியிட்ட மதிப்பீட்டறிக்கை பயனுள்ள முறையில் பதில் அளிக்க முடியவில்லை என்றும் 79.83 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
