ஏப்ரல் 21, 2026 அன்று வெளியாகியுள்ள AQI.in தரவுகளின்படி, உலகின் மிக வெப்பமான 20 இடங்களில் 19 இடங்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளன.
வட இந்தியா மற்றும் கிழக்கு இந்தியா முழுவதும் நிலவும் தீவிர வெப்ப அலை காரணமாக, பல நகரங்களில் வெப்பநிலை 44°C முதல் 46°C வரை உயர்ந்துள்ளது.
பாகல்பூர்(பீகார்), தால்சர்(ஒடிசா), மற்றும் அசன்சோல்(மேற்கு வங்கம்) ஆகிய நகரங்கள் தலா 44°C வெப்பநிலையுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.
இருப்பினும், மேற்கு வங்கத்தின் மேதினிபூர், பலிசக், ஜார்கிராம் மற்றும் பீர்பூம் போன்ற சில பகுதிகளில் வெப்பநிலை 45°C முதல் 46°C வரை எட்டியுள்ளதாக நிகழ்நேரத் தரவுகள் தெரிவிக்கின்றன.
பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் இடம்பிடித்த ஒரே இந்தியாவிற்கு வெளியிலுள்ள நகரம் நேபாளத்தின் லும்பினி ஆகும்.
உலகிலேயே வெப்பமான 20 இடங்களில் 19 இந்தியாவில் உள்ளதாம்; வெளியான அறிக்கை
