பணியறிக்கையை வழங்க பெய்ஜிங் வந்துள்ள ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி லீ ஜியாசாவ்வுடன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டிசம்பர் 18ஆம் நாள் பிற்பகல் சந்திப்பு நடத்தி, ஹாங்காங்கின் தற்போதைய நிலைமை பற்றியும் சிறப்பு நிர்வாக பிரதேச அரசின் பணி பற்றியும் கேட்டறிந்தார்.
கடந்த ஓராண்டில் நிர்வாக அதிகாரி லீ ஜியாசாவ்வின் தலைமையில் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு துணிச்சலுடன் பொறுப்பேற்று, செவ்வனே பணிபுரிந்து நல்ல சாதனைகளைப் பெற்றுள்ளது.
தொற்றுநோய் பாதிப்பிலிருந்து மீட்சியடைந்துள்ள ஹாங்காங், சிறப்பு தகுநிலை மற்றும் மேம்பாடுகளை நிலைநிறுத்தி, வளர்ச்சிக்கான இயக்காற்றலை அதிகரித்துள்ளது. உள்ளூர் மக்களின் பிரச்சினைகளை முயற்சியுடன் தீர்ப்பதோடு, சமூக ஒழுங்கை வலுப்படுத்தி, வளர்ச்சியையும் ஊக்குவித்துள்ளது.
லீ ஜியாசாவ் மற்றும் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் பணிகளை சீன மத்திய அரசு பாராட்டுவதாக ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள் என்ற கொள்கையை மத்திய அரசு முழுமையாகவும் சரியாகவும் உறுதியுடன் பின்பற்றி, நாட்டுப்பற்றுடையவர் ஹாங்காங்கை நிர்வாகிக்கும் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு, நிர்வாக அதிகாரி மற்றும் சிறப்பு நிர்வாக பிரதேச அரசுக்கு முழுமூச்சுடன் ஆதரவளிக்கிறது. ஹாங்காங்கின் எதிர்காலம் மீது நம்பிக்கை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.