உத்தரகாண்ட் மாநிலம் மதுரா ஸ்ரீ துவரிகாதீஷ் கோயிலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ரங்பாரதி ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது.
ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் கயானா, தென்னாப்பிரிக்கா, திரினிதாத், இங்கிலாந்து, மொரீசியசு மற்றும் பிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகை மேற்கு வங்கத்தில் “வசந்தகாலத் திருவிழா என அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, விருந்தாவன், நந்தகோன், பர்சனா ஆகிய நகரங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுமார் 16 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.
இந்நிலையில்,ஹோலி பண்டிகையை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் மதுரா ஸ்ரீ துவரிகாதீஷ் கோயிலில் ரங்பாரதி ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை வீசி ஹோலி பண்டிகையை உற்சாகமான கொண்டாடி மகிழ்ந்தனர்.