மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.
இன்று காலை 6 மணியளவில் கள்ளழகர் பெருமான், பச்சைப்பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வலம் வந்து வைகை ஆற்றில் இறங்கினார்.
அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் கோவிந்தா..கோவிந்தா..கோஷம் விண்ணை பிளக்க அழகர் எழுந்தருளினார்.
முன்னதாக வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக கடந்த 21ம் தேதி அழகர்மலையில் இருந்து தங்க குதிரையில் புறப்பட்டார்.
ஏப்ரல் 22ம் தேதி கள்ளழகரை மூன்று மாவடியில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நிகழ்வு நடைபெற்றது.
வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்கு முன்பாக வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரையில் சென்று அழகரை வரவேற்றார்.